உதிராப் பூக்கள் – 2 : சுந்தரபுத்தன்

Uthira pookkal – 2

___________________________________________________________________________________________________

நேற்றைய நினைவுகள்bbuddhan's photos 21.7.16a

ஜானி ஜோ. நீண்டகாலமாக கைவிடப்பட்ட அழிந்துபோன இடங்களை க்ளிக் செய்வதில் பேரார்வம் கொண்டவர். அமெரிக்காவின் க்ளிவ்லேண்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர்.

புல்பூண்டுகள் மண்டி கவனிப்பாரற்றுக் கிடக்கும் மருத்துவமனைகள், பாழடைந்த தேவாலயங்கள், விளையாட்டு அரங்குகள், மழைநீர் தேங்கி வனமாய் மாறிய பூங்காக்கள், ரயில்நிலையங்கள் என ஜானி ஜோவின் கண்களில் பட்டவை அனைத்தும் கைவிடப்பட்ட கட்டடங்கள். அழிந்த உலகில் இயற்கையின் பேரழகை தரிசிக்கும் கலைஞன்.

நாற்பதுகளின் பிற்பகுதியில் ஓஹயோ மாகாணத்தின் நியூபரியில் உள்ள தோட்டத்தில், பழைய போர் விமானங்களைச் சேகரித்துவைத்திருந்தார் ஸ்க்ராப்யார்டு ஊழியரான வால்டர் சாப்லாட்டா.

 

buddhan photos 21.7.16b2010ஆம் ஆண்டு சாப்லோட்டாவின் மரணத்திற்குப் பிறகு விமானங்களின் இந்த மயானக்கூடம் அவரது உறவினர்களால் ரகசியமாக பாதுகாக்கப்பட்டது. பழைய பொருட்களை வாங்கிக்குவிக்கும் வணிகர்களுக்குப் பயந்தே அப்படி பொத்தி வைத்திருந்தார்கள்.

 

இரண்டாம் உலகப் போரில் அலைந்து திரிந்து குண்டு மழை பொழிந்த விமானங்கள் ஓய்வெடுக்கும் இந்த இடத்தை மயானம் என்றே குறிப்பிடுகிறார் ஜானி ஜோ. இங்கே 30 விமானங்களும், 50 விமான எந்திரங்களும் இருக்கின்றன. வரலாறு உறைந்துள்ள ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். “அதுவொரு கலைப்படைப்பைப் போல பிந்தைய அப்போகலிப்டிக் பார்வையை உருவாக்குகிறது” என்கிறார் ஜோ.buddhan phot 21.7.16c

 

இந்த விமானங்கள் பொழிந்த குண்டுகளில் எத்தனை மனிதர்கள் உயிரிழந்திருப்பார்கள். ஆயிரம் வார்த்தைகளை உங்களுக்குச் சொல்லும் இந்தப் படங்கள். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் பார்க்கவேண்டிய நம்பமுடியாத இடம் இது என்று கூறும் ஜோவின் படங்கள் பார்ப்பவர் மனங்களில் இருளையும் திகிலையும் கொண்டுவந்து கொட்டுகின்றன.

 

புகைப்படக்காரர் ஜானி ஜோவின் ஒரு சொல்: “இன்றைய சிதைவு நேற்றைய நினைவுகள்”

_____________________________________________________________________________________________________